ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்பைடர்’ ஆகஸ்ட் 11ம் வெளியாவதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத்தி சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஸ்பைடர்’ . இந்தப் படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நாளை முதல் ஐதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் வெளியீடு ஜுன் மாதம் 23ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. படத்தின் கிளைமாக்சை முருகதாஸ் தற்போது மாற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார் எனத் தகவல் வெளியானது. அதனால்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளி வைக்கத் திட்டமிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். ஜுன் 23ல் ரிலீஸ் இல்லை என கடந்த வாரத்திலிருந்தே செய்திகள் வெளியாகின.

தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை ஆகஸ்ட் 11ம் தேதி என முடிவெடுத்துள்ளார்களாம். தமிழ், தெலுங்கில் நேரடியாக எடுக்கப்படும் இந்தப் படத்தை மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்ய உள்ளார்கள்.