Reviews | விமர்சனங்கள்
பல ஸ்பைடர் மேன்கள் ஒரே இடத்தில சந்தித்தால் – திரைவிமர்சனம் ! SPIDER-MAN: INTO THE SPIDER-VERSE .
கொலம்பியா பிக்ச்சர்ஸ் , சோனி அனிமேஷன் பிக்ச்சர்ஸ் மார்வெலுடன் இணைந்து தயாரிக்கும் அனிமேஷன் சூப்பர் ஹீரோ படம். வேற யூனிவெர்சில் நடப்பது போன்ற கதைக்களம். பாப் , பீட்டர் ராம்சேய் மற்றும் ரோட்னி ரோதம் இப்படத்தை இயக்கியுள்ளனர். காமிக்சில் இடம் பெரும் மைல்ஸ் மொரேல்ஸ் கதாபாத்திரத்தினை மையமாக வைத்து உருவாகியுள்ள அனிமேஷன் படம்.
கதை
நம் அண்டம் போலவே பல யூனிவெர்ஸ்கள் ஒரே சமயத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் என்பதே கான்செப்ட். இந்த உலகில் இறந்த தன் மகன் மற்றும் மனைவியை பாரலேல் யூனிவெர்சில் இருந்து கொண்டு வர முயற்சிக்கிறான் வில்லன் கிங் பின்.
அப்பா போலீஸ், அம்மா டாக்டர். ஸ்காலர்ஷிப் கிடைப்பதால் வேறு பள்ளிக்கு செல்கிறான் மைல்ஸ் மொரேல்ஸ் . அது அவனுக்கு பிடிக்கவில்லை தன் மாமாவிடம் சென்று ஆறுதல் தேடுகிறான்.
அப்படி செல்லும் சமயத்தில் ஸ்பைடர் கடிக்க உடலில் மாறுதல் ஏற்படுகிறது சிறுவனுக்கு.

spider-man
அதுமட்டுமன்றி வில்லன் கிங் பின் மற்றும் அவன் கூட்டாளி கிறீன் கோப்லின் உடன் மோதும் பீட்டர் பார்க்கரான ஸ்பைடர் மேன் உயிர் இழக்கிறான். இந்த சிறுவனை உலகை காப்பதும் படை சிப் ஒன்றை தருகிறான்.
குழுப்பதில் தடுமாறுகிறார் சிறுவன். அந்த சமயத்தில் குவாண்டம் பிசிக்ஸ் விலையாக போர்டல் திறக்க கடை கடவென்ன வெவேறு யூனிவெர்சில் இருந்து ஸ்பைடர் மேன்கள் வந்துவிடுகின்றனர்.
விவாகரத்தான பீட்டர் பார்க்கர், அமேசிங் ஸ்பைடர் மேனின் காதல், வருங்காலத்தில் இருந்து ரோபோட் ஸ்பைடர் உடன் குட்டிப்பெண், நாஜி காலத்து ப்ளேக் அண்ட் வாயட் ஆசாமி, மிருக ஸ்பைடர் என்று ஐந்து நபர்கள் மைல்ஸ் உடன் இணைந்து விடுகின்றனர்.

spider-man-into-the-spider-verse
வில்லனின் மெஷினை அழித்தானா மைல்ஸ், மற்றவர்களை அவர்களின் உலகுக்கு அனுப்பினானா என்பதே மீதி கதை.
சினிமாப்பேட்டை அலசல்
சிறப்பான 3 டி, அசத்தும் கிராபிக்ஸ், அம்சமான கதையோட்டம், கலக்கல் பின்னணி இசை. ஆக்ஷன் காமெடி, மெஸேஜ், குடும்ப உறவுகள் என அணைத்து ட்ரேட் மார்க் அம்சங்களும் இப்படத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு சரியான தீனி, அதே போல பெரியவர்களும் சலிப்பு தட்டாமல் பார்க்க முடியும்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்
ஆக மொத்தத்தில் காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் பட பிரியர்களுக்கு சூப்பர் கொண்டாட்டம் இப்படம்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5
