India | இந்தியா
இளைஞரின் காதுக்குள் கூடுகட்டி வாழ்ந்த உயிரினம் எது தெரியுமா? அதிர்ச்சியான மருத்துவர்கள்
எல்லோரும் உயிரினங்களை வீட்டிற்குள் வைத்து வளர்த்து வருகின்றனர். ஆனால் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதுக்குள் வளர்த்து வந்த விஷயம் அந்த நாட்டினர் இடையே இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டன் நாட்டில் உள்ள கென்ட் நகரம் என்ற பகுதியில் வாழ்ந்து வருபவர் வில்லியம் கோமஸ்(27). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இதேபோல் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வேலை முடித்துவிட்டு ஓய்வெடுக்கலாம் என வீட்டிற்கு வந்த போது, வீட்டில் அளவுக்கு அதிகமான சிலந்திகள் இருப்பதைக் கண்டு அசௌரியமாக உணர்ந்தார்.
இதனால் வீட்டினை சுத்தம் செய்துவிட்டு உறங்கி விட்டார். அடுத்த நாள் காலையில் அவருக்கு காதடைப்பு, தலைவலியும் ஒருசேர ஏற்பட்டுள்ளது. இதனால் காது துடைப்பானை கொண்டு காதினை சுத்தம் செய்த போது காதிலிருந்து சிலந்தி ஒன்று வெளியே எடுக்கப்பட்டது.

spider-ear
இதனால் அதிர்ச்சி அடைந்த கோமஸ், முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டு பின் காது பாதுகாப்பிற்காக ஹெட்செட் மாட்டிக் கொண்டு உறங்கிவிட்டார். இந்த செய்தியை கேட்ட கென்ட் நகரம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
