Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொற்பிழையுடன் தமிழில் ட்வீட் பதிவிட்ட அஜித் பட வில்லன் ! நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

கபீர் துஹான் சிங்

இந்த மாஸ் வில்லனை எளிதில் மறந்து விட மாட்டார்கள் அஜித் ரசிகர்கள். வேதாளம் படத்தின் மூன்று வில்லன்களில் முக்கியமானவர் இவர். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் மோசட் வான்டட் வில்லன் நடிகர் இவர்.

ajith kabir vedalam

சில நாட்களாகவே இவர் விசுவாசம் படத்தில் வில்லனாக நடிப்பதாக பலரும் கோலிவுட்டில் கிசு கிசுத்து வந்தனர். இந்நிலையில் தான் விஸ்வசம் படத்தில் நடிக்கவில்லை. காஞ்சனா 4 மற்றும் சித்தார்த் படங்களில் தான் நடிக்கிறேன் என்று தமிழில் ட்விட்டரில் பதிவிட்டார்.

பல இடங்களில் சொற்பிழை இருந்தது, உடனே சும்மா விடுவார்களா நம் நெட்டிசன்கள், பலரும் இவரை கலாய்க்க ஆரம்பித்தனர்.

Kabir Duhan Singh

ஒரு பக்கம் நெட்டிசன்கள் கழுவி ஊத்த மறுபுறமோ கபீருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்தனர். மேலும் அவரின் முயற்சியையும் பாராட்டினார்கள்.

அதிலும் குறிப்பாக ஒரு நபரின் ட்வீட் மிகவும் பிடித்து போக கபீர் சகோதரன் என்று அழைத்து, தன் பங்கு நன்றியை தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top