புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

நாக சைதன்யாவுக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்.. பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த சமந்தா

Samantha: தென் இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட தம்பதிகளாக இருந்தவர்கள் தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா. நீண்ட வருடம் காதலித்து திருமணம் செய்து நான்கு வருடங்கள் வாழ்ந்த நிலையில் இந்த தம்பதி மனம் ஒத்து பிரிவதாக கடந்த 2021 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தார்கள்.

விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு நாக சைதன்யா நிறைய இடங்களில் சமந்தாவை பற்றி நல்லவிதமாக பேசி இருந்தார். ஆனால் சமந்தா சைதன்யாவை பற்றி எந்த இடத்திலும் பேசக்கூட விரும்பவில்லை. பட வாய்ப்புகள், திடீரென ஏற்பட்ட மையோசைட்டிஸ் நோய் என சமந்தாவின் வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன் பயணித்து வருகிறது.

அதே நேரத்தில் இந்த தம்பதிகள் விவாகரத்து வாங்கும் போது எந்த நடிகையுடன் நாக சைதன்யாவுக்கு காதல் இருப்பதாக வதந்திகள் வெளியானதோ அதே நடிகையுடன் அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது.

வக்கீல் நோட்டீஸ்

இந்த நிச்சயதார்த்த சமயத்தில் கூட சமந்தா பெரிதாக இதை பற்றி அலட்டிக் கொண்டதாய் தெரியவில்லை. நாக சைதன்யா- சோபிதா திருமண கொண்டாட்டம் கோலாகலமாக ஆரம்பித்திருக்கும் சமயத்தில் அதிரடியாக இன்னொரு செய்தி சமூக வலைத்தளத்தில் உலவி கொண்டிருக்கிறது.

அதாவது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து திருமணத்திற்கு முன்பு ஒரு பிளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். அதை தங்கள் விருப்பப்படி வடிவமைத்து திருமணத்திற்கு பிறகு அங்கே குடியேறினார்கள்.

விவாகரத்து அறிவிப்பு வெளியாகும் போது இருவரும் அந்த அப்பார்ட்மெண்ட்டை காலி செய்து விட்டார்கள். இந்த நிலையில் சோபிதா உடனான திருமணத்திற்கு பிறகு நாக சைதன்யா அந்த அப்பார்ட்மெண்டில் குடியிருக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இருந்தாலும் சமந்தாவுடன் வாழ்ந்த அந்த அப்பார்ட்மெண்டில் வாழ சோபிதாவுக்கு விருப்பம் இல்லை எனவும் சொல்லப்படுகிறது. மேலும் அந்த அப்பார்ட்மெண்ட்டை வேறுவிதமாக வடிவமைத்து திருமண பரிசாக சோபிதாவுக்கு நாக சைதன்யா பரிசளிக்க இருப்பதாகவும் பேச்சுக்கள் எழுந்து வருகிறது.

அதே மாதிரி அந்த அப்பார்ட்மெண்ட் வாங்க மற்றும் அடுத்தடுத்த செலவுகளில் அதிகம் பணம் செலவழித்தது சமந்தா என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பார்ட்மெண்ட் செலவில் தன்னுடைய பங்கை திருப்பித் தருமாறு சமந்தா நாக சைதன்யாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக இருதரப்பிலிருந்தும் எந்த செய்தியும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Trending News