கோலிவுட் திரையுலகில் தனுஷும் சிம்புவும் நடிகர்களாக மட்டுமின்றி அவ்வப்போது பாடல்களை பாடும் பாடகர்களாகவும் விளங்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே. அதிலும் பிற நடிகர்களுக்காவும் இருவருமே பாடுவதுண்டு. இந்நிலையில் பிற நடிகர்களுக்காக தனுஷ் மற்றும் சிம்பு பாடிய பாடல்கள் ஒருசிறு இடைவெளியில் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  வி.ஐ.பி 2 டீசர் வெளிவந்தது.! புது மியூசிக் புது டயலாக்..

பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தனின் சகோதரர் நடிகர் கிருஷ்ணா நடித்து வரும் ‘யாக்கை’ படத்திற்காக யுவன்ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடிய ‘சொல்லித்தொலையேம்மா’ என்ற சிங்கிள் பாடல் வரும் 8ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சிம்புவின் நண்பரும் பிரபல நடிகருமான விக்ரம்பிரபு நடித்துள்ள ‘வீரசிவாஜி’ படத்திற்காக டி.இமான் இசையில் சிம்பு பாடிய ‘தாறுமாறு தக்காளி சோறு’ என்ற பாடல் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இரண்டு பாடல்களையும் வரவேற்க தனுஷ், சிம்பு ரசிகர்கள் இப்போதே சமூக வலைத்தளங்களில் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.