மலையாளத்தில் தயாரிப்பாளரான சுரேஷ் குமார், நடிகை மேனகா தம்பதியின் இரண்டாவது மகள் தான் கீர்த்தி சுரேஷ்.

கீ சு என்கிற கீர்த்தி சுரேஷ்:

தன் அப்பாவின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர், பின் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். அவர் தன் நான்கு வயது வரை சென்னையில் இருந்தவர், பின் திருவனந்தபுரம் சென்று செட்டில் ஆகிவிட்டார். பின்னர் மீண்டும் தன் கல்லூரி படிப்பிற்கு சென்னை வந்தார். இவர் பேஷன் டிசைனிங்கில் டிகிரி முடித்துள்ளார். பல விழாக்களுக்கு தன் உடையை இவரே டிசைனும் செய்வார்.

2013ல் தன் செமஸ்டர் லீவின் பொழுது கீதாஞ்சலி என்ற மலையாள படத்தில் இரட்டை வேடங்களில் நடித்தார். அப்படம் அங்கு சூப்பர் ஹிட். பின் 2014 இயக்குனர் ஏ எல் விஜயின் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

கீர்த்தியின் பிறந்தநாள்:

அக்டோபர் 17 இவருடைய பிறந்த தேதி. நேற்று தன் 25  வயதை தொட்டு விட்டார் கீர்த்தி. சோசியல் மீடியாக்களில் பல பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

தன் ட்விட்டர் பக்கத்தில் பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிவிட்டு, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவரின் கெட் அப் போட்டோ வை, அவரின் ரசிகர்கள் பார்வைக்காக அப்லோட் செய்தார்.

சமந்தா அக்கினேனி :

சமந்தா கீர்த்தி சுரேஷுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படம் சாவித்ரி ( மகாநதி). இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் கண்கள் மட்டும் தெரிவது போன்ற போட்டோவை படக்குழு வெளியிட்டது. இந்த போட்டோ வை தன் ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.

” அழகிய கண்கள். இந்தக்கண்கள் ஒரு வாழ்க்கையை உங்கள்  முன் கொண்டுவரும். ஹாப்பி பர்த்டே.”

கீர்த்தி சுரேஷ் பிறந்தநாள் பரிசாக வெளியான இப் போடோக்களை அவருடைய ரசிகர்கள்  ட்விட்டரில்  நேற்று அதிகமாக ரீ ட்வீட் செய்தனர்.

கீர்த்தி சுரேஷ் தன் பங்கிற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.

அடுத்த படங்கள்:

தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கல் ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. அதே போல் சாவித்ரி, மற்றும் சாமி 2 படங்களில் இப்பொழுது நடித்து வருகிறார். மேலும் விஷாலின் சண்டக்கோழி 2 , தெலுங்கில் பயன் கல்யாண் படம் என்று தன் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

சினிமா பேட்டை கொசுறு நியூஸ்: கீர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர் அவரின் அக்கா ரேவதி சுரேஷ் தான். ரேவதி சுரேஷ் அனிமேஷன் செய்வதில் ஸ்பெசலிஸ்ட், ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் நிறுவனத்துடன் உடன் பணியாற்றியவர். தன் சினிமா, சொந்த வாழ்க்கை என அனைத்தையும், தன் அக்கா விடம் கலந்து ஆலோசித்து தான் முடிவெடுப்பாராம் கீர்த்தி சுரேஷ்.