கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பித்த எஸ்பிபி சரண்..

சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன்.

அவருடைய உடல்நிலை ரொம்பவே மோசமடைந்து சாவின் எல்லைக்கே சென்றுவந்த எஸ்பிபி-க்கு, உயிர்காக்கும் உபகரணங்கள் ஆன எக்மோ, வெண்டிலேட்டர் போன்ற கருவியின் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு எல்லாம் அப்பாற்பட்டு, அவருடைய பாடல்களுக்கு அடிமையான ரசிகர்கள் பலரும் மெழுகுவத்தி ஏந்தி அவரவர் வீட்டில் தொழுகைகளை மேற்கொண்டனர். கொரோனா தோற்றால் எத்தனையோ பிரபலங்கள் பாதிக்கப்பட்டாலும், இந்த அளவிற்கு யாரும் பொதுமக்களுடைய பிரார்த்தனையை பெறவில்லை என்பதுதான் உண்மை.

அவர்களுடைய வேண்டுதளுக்கெல்லாம் பலனாகத்தான் தற்போது எஸ்பிபி-க்கு கடைசியாக எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட்ல நெகட்டிவ் ரிசல்ட் வந்திருக்குது.

ஸ்போர்ட்ஸ்சில் ரொம்பவே ஆர்வம் காட்டும் எஸ்பிபி, கிரிக்கெட்.. ஃபுட்பால்.. மேட்ச்களை ஆஸ்பத்திரியில் இருக்கும் டிவில பார்க்குறாராம், அந்த அளவிற்கு எஸ்பிபி-யின் உடல்நிலை முன்னேறி இருப்பதாக, அவரோட மகன் சரண் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து எஸ்பிபி மீண்டதால், சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் எஸ்பிபியின் பாடலை தெறிக்க விடுகின்றனர் அவருடைய ரசிகர்கள். சரண் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.