Connect with us
Cinemapettai

Cinemapettai

spb

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எஸ்பிபி தன் வாழ்நாளில் இந்த மூன்று ஹீரோக்களுக்கு மட்டும் பாட்டு பாடவில்லையாம்.. பாவம் பண்ணிட்டாங்க போல!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தவர்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலான பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களின் தொடக்க பாடல்கள் எப்பொழுதுமே எஸ்பிபி உடையதே.  இவ்வாறு புகழ்பெற்ற எஸ்பிபி தமிழில் இந்த மூன்று ஹீரோக்களுக்கு மட்டும் ஒரு பாடல் கூட பாடவில்லையாம்.

இது தமிழ் சினிமாவில் உள்ள அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்பிபி  அனைத்து நடிகருடனும் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் விஷால், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய மூன்று முன்னணி தமிழ் ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலை கூட எஸ்பிபி பாட வில்லையாம்.

இந்த மூன்று ஹீரோக்களும் பல வருடங்களாக திரைத்துறையில் பணியாற்றினாலும் எஸ்பிபியின் ஒரு பாடலில் கூட  அவருடன் இணையவில்லை. இதை நினைத்து இவர்கள்  இப்பொழுது வருத்தப்படுகின்றனர்

எஸ்பிபி பல தலைமுறைகளைத் தாண்டி நடிகர்களுக்கு பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி விஷால், விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top