fbpx
Connect with us

Cinemapettai

ரசிகர்களின் வேண்டுதல் பலித்தது.. எஸ்பிபி பாலசுப்ரமணியம் உடல்நிலையில் சீரான முன்னேற்றம்!

Tamil Nadu | தமிழ் நாடு

ரசிகர்களின் வேண்டுதல் பலித்தது.. எஸ்பிபி பாலசுப்ரமணியம் உடல்நிலையில் சீரான முன்னேற்றம்!

சினிமாவில் 1966 ஆண்டு முதல் இருந்தே, முன்னணி இசையமைப்பாளராக திகழும் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் தனது பாடல்களினால் மக்களின் மனதை கட்டிப் போடும் அளவுக்கு இசையமைத்தவர்.

இவருடைய பாடல்கள் இன்றுவரை ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்து மொழிகளில் பாடல் பாடுவது, இசையமைப்பது, டப்பிங் மற்றும் நடிகராகவும் பல பன்முகத் திறமையுடன் சினிமாவில் வலம் வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி கொரோனா பாதிப்பினால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட, 74 வயதுடைய எஸ்பிபி- க்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மோசமடைந்தது.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் அனைவரும் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் வாசலில் நின்று, மீண்டும் வா.. எஸ்பிபி என்று குரல் எழுப்பியும், அவரவர் தங்கள் வீடுகளில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதன் பலனாகவே எக்மோ & வென்டிலேட்டர் மூலம் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு, நுரையீரலின் செயல்பாடு சீராக உள்ளதாகவும், தற்போது அவர் பிஸியோதெரபி சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பு தருவதாக அவருடைய மகன் சரண் தனது வீடியோ பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் 15-20 நிமிடங்கள் அவரால் உட்கார முடிகிறது என்றும், வாய் வழியாக உணவு கொடுப்பதற்கு மருத்துவர்கள் முயற்சித்து வருவதாகவும் தற்போது தனது தந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று மிகுந்த உருக்கத்துடன் தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார் சரண்.

இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் துள்ளி குதித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். அதோடு பிரார்த்தனையைக் கேட்ட கடவுளுக்கும் நன்றி செலுத்தி வருகின்றனர்.

லேட்டஸ்ட் வெளியிட்ட வீடியோ

Continue Reading
To Top