சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

3வது திருமணத்திற்கு தயாராகும் எஸ்பிபி மகன்.. காதல் வலை விரித்த பிரபல நடிகை

பாடகர் எஸ்.பி.பி சரண், நடிகை சோனியா அகர்வாலை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகனான எஸ்.பி.பி சரண் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.

மேலும் சில திரைப்படங்களில் நடித்து வந்த எஸ்.பி.பி சரண், தற்போது பிரபல தொலைக்காட்சியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார். இதனிடையே சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளதாக பதிவிடப்பட்ட புகைப்படத்தில் நடிகை அஞ்சலி, நடிகர் சந்தோஷ், நடிகை சோனியா அகர்வால், எஸ்.பி.பி சரண் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தன.

ஆனால் அதற்கு முன்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட புகைப்படத்தில், நடிகை சோனியா அகர்வாலுடன் மட்டும் எஸ்.பி.பி சரண் நின்றுக் கொண்டு போஸ் கொடுக்கும் புகைப்படத்தோடு ,7 ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் இடம்பெற்ற நினைத்து நினைத்து பாடலின் ட்யூனை பதிவிட்டு சம்திங் நியூ பிறேவிங் என்ற ஆங்கில வாசகங்களுடன் கேப்ஷனை பதிவிட்டிருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வரும் நிலையில் பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து வருகின்றனர். மேலும் சூரரை போற்று, அழகு குட்டிச் செல்லம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வினோதினி இவர்களது இந்த புகைப்படத்தை பார்த்து கமெண்டில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.

இதனிடையே எஸ்.பி.பி சரண், ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்று தற்போது இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வரும் நிலையில், நடிகை சோனியா அகர்வாலை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகை சோனியா அகர்வாலும், இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து சில வருடங்கள் வாழ்ந்து விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகை சோனியா அகர்வாலும் இரண்டாவது முறையாக எஸ்.பி.பி சரணை திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

- Advertisement -

Trending News