Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

கேஜிஎப், புஷ்பாவுக்கு போட்டியாக நானியின் தசரா.. வைரலாகுது வெறித்தனமான டீஸர்

ஆக்ஷன் படங்களுக்கு தான் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு  அதிகமாக உள்ளது. தென்னிந்தியா என்ற லிமிட்டை கடந்து சென்று வருகிறது நம் ஊர் சினிமாக்கள். கே ஜி எப் படம் தான் ட்ரெண்ட் செட்டர். பேன் இந்திய ரிலீஸ் என்ற வார்த்தை தற்பொழுது பிரபலமாகி விட்டது.

கன்னட சினிமாவில் கே ஜி எப் எனில் தெலுங்கு சினிமாவில் அல்லு அர்ஜுனின் புஷ்பா. இந்த படங்கள் குவித்த வசூல் வேற லெவல். பல ஹீரோக்கள் நீ நான் என பேன் இந்தியா ரிலீஸ் நோக்கி உழைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

நானி தெலுங்கு சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோக்களில் ஒருவர். இவரது படங்களின் கதைக்களம்  சற்றே மாறுபட்டு தான் இருக்கும். நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கமெர்ஷியல் சினிமாக்கள் தான் இவரின் ட்ரேட் மார்க். ஷியாம் சிங்கா ராய் படத்தை தொடர்ந்து இவரது அடுத்த ப்ரொஜெக்ட் தசரா.

ஸ்ரீகாந்த் ஓடேலா இப்படத்தை இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு, நவீன் நூலி எடிட்டிங். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரா சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீஸர் இன்று காலை வெளியானது. இப்படத்தை ஐந்து மோஹிக்களில் ரிலீஸ் செய்ய திட்டம் வைத்துள்ளனர் படக்குழு. விரைவில் நமக்கு அடுத்த மாஸ் ஆக்ஷன் சினிமா ரெடி என்பது மட்டும் உறுதி.

Continue Reading
To Top