வெறும் 5 படங்களில் மக்கள் மனதை வென்ற எஸ்பி ஜனநாதன்.. ஜெயம் ரவிக்கு கொடுத்த மாஸ் ஹிட்

சினிமாவில் பல படங்களை கொடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் இடையே வெறும் 5 படங்களிலேயே மக்கள் மனதை வென்றவர் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். இயக்குனர் மட்டுமல்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் எடுத்த 5 படங்களில் ஒரு படம் தேசிய விருதும் வென்றுள்ளது.

இயற்கை: எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இயற்கை. இப்படத்தில் ஷியாம் ,அருண்விஜய், குட்டி ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் 30 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் சிறந்த படம் என்ற தேசிய விருதையும் பெற்றது. மூவருக்கும் இடையே ஆன காதலை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.

ஈ: எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈ. இப்படத்தில் ஜீவா, நயன்தாரா, கருணாஸ், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் ஒரு ரவுடியாக இருக்கும் ஜீவா எப்படி மற்றவருக்கும் உதவுக்கிறார் என்பது இப்படத்தின் மையக் கருத்து.

பேராண்மை : எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேராண்மை. இப்படத்தில் ஜெயம் ரவி, பொன்வண்ணன், வடிவேலு ஊர்வசி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்காக ராக்கெட் ஏவுவதை அன்னிய சக்திகள் சீர்குலைக்க காட்டுக்குள் ஊடுருவும்போது 5 மாணவிகள் உதவியுடன் ஜெயம் ரவி அதை முறியடிக்கிறார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை: எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. மக்களுக்கு பொதுவுடமை கருத்துக்களை சொல்லி வரும் ஜனநாதன் இப்படத்திலும் அதை வெளிகாட்டி இருந்தார்.

லாபம்: எஸ் பி ஜனநாதன் எழுதி, இயக்கிய திரைப்படம் லாபம். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருந்தார். இப்படம் இலாபத்தைப் பெற வேண்டும் என்ற பேராசை எவ்வாறு குறுகிய காலத்திலேயே நல்ல முடிவுகளை எடுக்க வழிவகுக்கும் என்பதை குறிக்கிறது.

நிறைய படங்கள் கொடுக்க வேண்டும் எண்ணத்தில் படங்களை இயக்கும் இயக்குனர்கள் மத்தியில் நல்ல படங்களை மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் எஸ்பி ஜனநாதன் செயல்பட்டார். லாபம் படத்தின் இறுதிக்கட்ட பணியில் இருந்த போது எஸ்பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி தனது 61ஆவது வயதில் காலமானார்.