Connect with us
Cinemapettai

Cinemapettai

vijay-jayam-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூளைச்சாவு அடைந்த விஜய் சேதுபதி பட இயக்குனர்.. இவர் ஜெயம் ரவிக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்தவராச்சே!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தங்களது திரைக்கதை மற்றும் படங்களின் மூலம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளது கோலிவுட் வட்டாரத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் 2009 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் பேராண்மை. இந்த படத்தை இயக்கியவர் எஸ்பி ஜனநாதன். அதற்கு முன்பே இயற்கை, ஈ போன்ற படங்களை இயக்கியிருந்தார்.

சமூக அக்கறை படங்கள் எடுக்கிறேன் என ஓவராக கருத்து சொல்லாமல் சரியான என்டர்டைன்மென்ட் காட்சிகளையெல்லாம் சேர்த்துக் கொடுப்பதில் கில்லாடி. இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் எனும் படத்தை எடுத்து முடித்துள்ளார்.

அதற்கு முன்பே விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா ஆகிய இருவரையும் வைத்து புறம்போக்கு என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு சரியான வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் லாபம் படத்தின் வெற்றியை மிகவும் எதிர்பார்த்த காத்துக் கொண்டிருந்தார் ஜனநாதன்.

sp-jananathan-cinemapettai

sp-jananathan-cinemapettai

இந்நிலையில் லாபம் படத்தை எடிட்டிங் பணியிலிருந்த ஜனநாதன் மதியம் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றாராம். வீட்டிற்கு போய் நீண்ட நேரமாகியும் வராததால் உதவியாளர்கள் நேரடியாக ஒரு வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது நடுவீட்டில் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாராம் ஜனநாதன். பிறகு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்த பிறகு அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ஜனநாதன் கவலைக்கிடமாக உள்ளதை பார்த்த மொத்த சினிமா உலகமும் சோகத்தில் உள்ளதாம்.

Continue Reading
To Top