Connect with us
Cinemapettai

Cinemapettai

spb-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எஸ் பி பாலசுப்ரமணியம் தன் வாழ்க்கையில் நடித்துள்ள 5 படங்கள் இவைதான்! எல்லாமே சூப்பர் ஹிட்!

எஸ் பி பாலசுப்பிரமணியம் மறைவு இந்திய சினிமா ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.

எஸ் பி பாலசுப்ரமணியை ஒரு பாடகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை சில படங்களில் நடித்து நிரூபித்திருக்கிறார். அந்தப் படங்களின் லிஸ்டை பார்ப்போம்.

கேளடி கண்மணி

1990 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் ராதிகா நடிப்பில் உருவான திரைப்படம் தான் கேளடி கண்மணி. 200 நாட்களுக்கு மேல் இந்த படம் திரையரங்குகளில் ஓடி வெற்றி படமாக அமைந்தது.

திருடா திருடா

1993 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான திருடா திருடா படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்திருப்பார். நகைச்சுவை கலந்த அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

காதலன்

1994 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடிப்பில் உருவான திரைப்படம் காதலன். இந்த படத்தில் பிரபு தேவாவின் தந்தையாக எதார்த்தமான நடிப்பை கொடுத்திருப்பார். இந்த படமும் சூப்பர் ஹிட்.

உல்லாசம்

1997 ஆம் ஆண்டு அஜித் மற்றும் விக்ரம் நடிப்பில் உருவாகி தோல்வியை தழுவிய திரைப்படம் உல்லாசம். ஆனால் இந்த படத்தில் எஸ் பி பி யின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

பிரியமானவளே

2000ம் ஆண்டு விஜய், சிம்ரன் நடிப்பில் உருவான பிரியமானவளே படத்தில் தளபதி விஜய்க்கு தந்தையாக நடித்திருப்பார். அந்த படத்தில் எஸ் பி பி யின் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top