கொரோனாவால் சிகிச்சை பலனின்றி எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவு.. உச்சகட்ட துக்கத்தில் ரசிகர்கள்

உலகப் புகழ்பெற்ற எஸ் பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ் பி பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரம் நல்ல முன்னேற்றம் தெரிவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன, ஆனால் நேற்று உடல்நிலை மிகவும்  மோசமானதால் கமலஹாசன் நேரில் சென்று பார்த்துள்ளார்.

நேற்றிரவே உயிர்ப் பிரிந்ததாகவும், ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடாமல் இருந்துள்ளனர்.

தற்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருவது மட்டுமல்லாமல், கண்ணீர் மல்க தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக இருந்த எஸ் பி பாலசுப்ரமணியம், தற்போது இல்லை என்பது நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

ஆனாலும் அவர் குரல் அனைத்து ரசிகர்களின் ரத்தத்தில் கலந்து விட்டது என்பது நிதர்சனமான உண்மை. கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களை 16 மொழிகளில் பாடிய ஒரே மனிதர் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கே வாங்கிக் கொடுத்தவர்.

அவர் அழிந்தாலும் அவர் பாடல்கள் என்றுமே அழிவு இல்லை. சினிமா பேட்டை ரசிகர்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.