India | இந்தியா
தமிழகத்தில் 300ரூபாய் முதலீட்டில் சாதனை படைத்த தமிழக பெண்..

செளபர்ணிகா வாழ்க்கையில் சாதிக்க அனுபவத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இவர் சிறுவயதில் இருக்கும் போது இவரது குடும்பம் வளமான செழிப்பான குடும்பமாக இருந்ததாகவும். பின்னர் நாளடைவில் 1998 இல் கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது இவரது குடும்பம் ஏழ்மையை சந்திக்க ஆரம்பித்தது.
ஒரு வேளை உணவிற்குக் கூட கஷ்டப்பட ஆரம்பித்தனர். இவரது தந்தையும் தாயாரும் வாழ்க்கையில் பிரிந்தனர். அதேபோல் செளபர்ணிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கருவுற்ற படத்திற்கும்நிலையில் இவரது கணவரும் இவரும் வாழ்க்கையில் பிரிந்தனர்.

sowbarnika vijay antony
இவருக்கு தற்போது பெண் குழந்தை உள்ளது. இவர் தன் பெண் குழந்தையின் வாழ்க்கையை நினைத்து தான் செய்துவந்த தொழிலை விட்டு தனியாக சொந்தமாக தொழில் தொடங்க முடிவெடுத்தார். அதிலும் வளர்ச்சி கண்டார்.
இவர் தொழில் தொடங்குமுன் விசிட்டிங் கார்டு அடித்து தெருத்தெருவாக கொடுத்துள்ளார். அதனை பார்த்த ஒரு நபர் இந்த மாதிரி எனக்கு ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். 300 ரூபாய் செளபர்ணிகா அவருக்கு விசிட்டிங் கார்டு அடித்து ஆனால் அவரிடம் ஆயிரம் ரூபாய்க்கு கொடுத்துள்ளார். இதுவே அவரது லாபம் ஈட்டிய தொழில்.
பின்பு காஸ்ட்யூம் டிசைனராக உருவெடுத்து கோவையில் பிரபலமான. அதனை அடுத்து தற்போது அவருக்கு சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனராக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜகஜால கில்லாடி படத்தில் இன்பிலிம் பிராண்டிங் காண்ட்டிராக்ட் பணியாற்றியுள்ளார். அடுத்ததாக விஜய்Antony நடிப்பில் உருவான திமிரு புடிச்சவன் படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றி உள்ளார். அந்த படத்தில் இவர் தமிழில் இரண்டு படத்திற்கும் மலையாளத்தில் ஒரு படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார்.
