தென்மேற்கு பருவமழை வரும், ஜூன் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், வட இந்தியாவில் 120 பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்துகிறது. தமிழ்நாட்டிலும், அதிகபட்சமாக 113 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டுமே கோடை மழை பெய்கிறது.

இந்த நிலையில், நடப்பாண்டு தென் மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நாடு முழுவதும் ஒரே சீரான அளவிற்கு மழை பெய்யக்கூடும் என்றும் தென் இந்தியாவில் இயல்பை விட அதிகமாகவே மழை பதிவாகும் என்றும் கணித்துள்ளனர்.

ஆனால், எல் நினோ விளைவால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பாதிக்கப்படும் என்றும், சராசரியை விட குறைவான மழை பொழிவு இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.