Hema Committee: மலையாள திரையுலகில் மீ டூ புகார்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு நடிகைகள் பலரும் டாப் நடிகர்களின் திரை மறைவு லீலைகள் ஒவ்வொன்றையும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
இதில் மோகன்லால், மம்மூட்டி, நிவின் பாலி, ஜெயசூர்யா என எதிர்பார்க்காத நடிகர்களும் சிக்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இது முற்றிலும் பொய் என்ற விளக்கம் வந்து கொண்டிருக்கிறது.
அதேபோல் தமிழ் திரையுலகிலும் ராதிகா உள்ளிட்ட சிலர் கேரவனுக்குள் நடக்கும் அட்டூழியங்களை கூறி வருகின்றனர். இந்த சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இது தொடர்பாக சில தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.
நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்ற கமிட்டி குழுவில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொடர்பான தொல்லைகள் இருந்தால் தாராளமாக புகார் தெரிவிக்கலாம்.
நடிகர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானம்
புகார் கொடுப்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து ஊடகங்களில் பேச வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் யூடியூப் தளத்தில் திரைத்துறையினர் குறித்து அவதூறாக பேசினால் சைபர் கிரைமில் புகார் அளிக்க தேவையான ஒத்துழைப்பு கொடுக்கப்படும்.
மேலும் மீ டூ குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்படும். அதேபோல் இது சம்பந்தமாக கொடுக்கப்படும் புகார்களை கமிட்டி சார்பில் நடிகர் சங்கம் கண்காணித்து வரும்.
இப்படியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது நாசர் உடன் கார்த்தி, குஷ்பூ, கோவை சரளா, சுகாசினி உள்ளிட்ட பலர் இருந்தனர். அதிலும் தவறு செய்பவர்களுக்கு ரெட் கார்ட் என்ற விஷயம் வரவேற்கப்பட்டு வருகிறது. இதனால் கோலிவுட்டில் மாற்றங்கள் வருமா என பார்க்கலாம்.
கோலிவுட் பக்கம் மையம் கொள்ளும் கேரளா புயல்
- மீ டூ புகாரில் சிக்கிய மலையாள க்ரஷ் நடிகர்
- தமிழ் சினிமாலையும் மீ டூ பிரச்சனை இருக்கு, கமிட்டி அமைக்கணும்
- மலையாள சினிமாவை புரட்டி போட்ட மீ டூ புகார்கள்