Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினி,விஜய்யை விட அதிகமான சம்பளம் கேட்ட பிரபல நடிகர்.. விழி பிதுக்கும் தயாரிப்பு நிறுவனம்
தென்னிந்திய நடிகர்கள் கோடிகளில் புரளுவது சாதாரணமாகிவிட்டது. முக்கியமாக தளபதி விஜய் பிகில் படத்திற்கு 50 கோடியும் தற்போது நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் மாஸ்டர் படத்திற்கு 80 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு கிட்டத்தட்ட 90 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகரான பாகுபலி பிரபாஸ் தனது அடுத்த படத்திற்காக பில்லியனில் சம்பளம் கேட்டுள்ளாராம்.
இதனால் தயாரிப்பு நிறுவனம் அதிர்ந்து போயுள்ளது, ‘பிரபாஸ் 21’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். இதற்காக 100 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளாராம் அதுமட்டுமில்லாமல் வரிக்காக 10 லட்சம் சேர்த்து கேட்டுள்ளது, தயாரிப்பு நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியாக உள்ளதாம்.
விஜயசாந்தி என்ற நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று 3 மொழிகளிலும் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்குகிறார்.
இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளாராம். நடிகர்கள் தனக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும் 100 கோடி வரை சம்பளம் கேட்பது நியாயமா என்று ரசிகர்களும் தலைச்சுற்றி போய் உள்ளனர்.
தளபதி விஜயின் அடுத்த படத்திற்குக்கான சம்பளம் 100 கோடியை எட்டிவிடும் என்று கோலிவுட் வட்டாரங்கள் மிரண்டு போய் உள்ளனர்.
