100 கோடிக்கு மேல் வசூல் செய்த 9 தென்னிந்திய நடிகர்கள்.. ரஜினியை முந்த முடியாத வசூல் ராஜா விஜய்!

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அவர்களின் திரைப்படங்களை பார்ப்பதற்காக ரசிகர்கள் நீண்ட நாட்கள் ஆவலோடு காத்திருந்து திரையரங்குகளில் அவர்களின் திரைப்படங்களை பார்த்து மகிழ்வர். இதனிடையே தற்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான எந்திரன், தர்பார், அண்ணாத்த, கோச்சடையான், லிங்கா, காலா, சிவாஜி, கபாலி உள்ளிட்ட 9 திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களாக. சில திரைப்படங்கள் முதல்நாளிலேயே 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்த படங்களாகும்.

விஜய்: தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில், மெர்சல், துப்பாக்கி, கத்தி, மாஸ்டர், தெறி பைரவா, சர்க்கார், பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. அதிலும் முக்கியமாக விஜயின் மெர்சல் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 96 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபு: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான சரிலெரு நீக்கேவரு, மஹரிஷி, ஸ்ரீமந்துடு, ஸ்பைடர் துக்குடு, பரத் எனு நேனு உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் முக்கியமாக பரத் எனு நேனு திரைப்படம் 187 கோடி வரை வசூல் சாதனை படைத்த திரைப்படமாகும்.

அல்லு அர்ஜுன்: தெலுங்கில் ஸ்டைலிஷ் ஆக்டர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஜூலாயி, ரேஸ் குர்ரம், சரைநொய்டு, துவ்வுடு ஜெகன்நாதன், அள வைகுண்டபுரவலு, புஷ்பா உள்ளிட்ட திரை படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும் அதிலும் முக்கியமாக அளவைகுண்டபுரம்லோ திரைப்படம் 200 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

அஜித் குமார்: தல அஜித்தின் விவேகம்,வீரம்,ஆரம்பம், வேதாளம், விசுவாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களாகும். இதில்  விசுவாசம் திரைப்படம் மட்டும் 300 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

பிரபாஸ்: தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான பாகுபலி, பாகுபலி 2, சாகோ ராதே ஷ்யாம் உள்ளிட்ட திரைப்படங்களில் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களாகும். அதிலும் முக்கியமாக பாகுபலி 2 திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை படைத்தது ஆகும்.

பவன் கல்யாண்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான வக்கீல் சாப் குஷி, கப்பர் சிங், அட்டரின்டிகி தரென்டி உள்ளிட்ட திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் ஆகும். இவர் நடிப்பில் வெளியான அட்டரின்டிகி தரெடி திரைப்படம் தமிழில் நடிகர் சிம்பு வந்தா ராஜாவா தான் வருவேன் ரீமிக்ஸ் செய்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆர்: தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான அரவிந்த சமேதா வீரராகவா, ஜனதா கரேஜ், ஜெய் லவ குசா, நண்ணக்கு பிரேமதோ உள்ளிட்ட திரைப்படங்கள் ஜூனியர் என்டிஆரின் 100 கோடி வசூல் சாதனை படைத்த திரைப்படங்களாகும். தற்போது இவர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 2, சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், 24 உள்ளிட்ட திரை படங்கள் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்த திரைப்படங்கள் ஆகும். இதில் சிங்கம் 2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 63 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

Next Story

- Advertisement -