fbpx
Connect with us

Cinemapettai

என்னை கல்யாணம் பண்ணுவியா? மாட்டியா? கதறும் இயக்குனர்.. கண்டுக்காத நடிகை.. கிளி பறந்துறருமோ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னை கல்யாணம் பண்ணுவியா? மாட்டியா? கதறும் இயக்குனர்.. கண்டுக்காத நடிகை.. கிளி பறந்துறருமோ?

தமிழ் சினிமாவில் இப்போதைக்கு பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் தான் அந்த முன்னணி ஹீரோயினும் இயக்குனரும். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனருக்கு பூச்சாண்டி காட்டி வருகிறாராம் அந்த நடிகை.

சிறிது இடைவெளி கிடைத்தாலும் வெளிநாடு சென்று பொழுதைக் கழிக்கின்றனர். விமானத்தில் செல்லும்போது கல்யாணம் பண்ணிக்கலாமா எனக் கேட்டால் நடு வழியில் இறக்கி விட்டிடுவாரோ என பயந்து கொண்டு இயக்குனரும் பேச்சு மூச்சில்லாமல் சென்று வருகிறாராம்.

காரணம் என்னவென்று கேட்டால், மேடம் தான் பைனான்சியராம். இப்போதைக்கு இயக்குனர் பாக்கெட்டில் பத்து பைசா கூட கிடையாதாம். இந்நிலையில் திருமணத்திற்குப் பிறகுதான் படம் இயக்குவது என முடிவெடுத்து இருந்த இயக்குனருக்கு தற்போது மேடம் கல்யாணத்துக்கு ஆப்பு வைத்துவிட்டார்.

அதாவது இப்போது வரை அந்த நடிகையின் மவுசு குறையவில்லை. ஆனால் திருமணத்திற்கு பிறகு அது நடக்க வாய்ப்பு இருக்கிறது எனக் கருதி திருமணத்திற்கு தடை போட்டுள்ளாராம்.

இதனால் டிசம்பர் இறுதியில் திருமணம் செய்து கொள்ளலாம் என கனவு கண்டு கொண்டிருந்தவருக்கு, டிசம்பர் இறுதி என்றுதான் சொன்னேன், எந்த வருடம் என்று சொல்லவில்லை என வைகைப்புயல் ஸ்டைலில் பதில் வருகிறதாம்.

சரி முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு என நடிகையின் கட்டளையே சாசனம் என கப்சிப் என்று இருக்கிறாராம். அவரோ திறமையுள்ள இயக்குனர் தான். ஆனால் அவர் கிரகம் அப்படி இருக்கு பாவம். ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா பாக்கலாம்னு சொல்றப்போ இவர் என்ன பண்ண முடியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top