fbpx
Connect with us

Cinemapettai

காயம் காரணமாக சி எஸ் கே அணியில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர். என்ன கொடுமை சார் இது.

Sports | விளையாட்டு

காயம் காரணமாக சி எஸ் கே அணியில் இருந்து விலகிய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர். என்ன கொடுமை சார் இது.

ஐபில் புதிய சீசன் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

வருடா வருடம் இந்தியாவில் சம்மர் கொண்டாட்ட ஸ்பெஷல் தான் ஐபில். இந்த சீசன் தேர்தல் காரணமாக வெளிநாட்டில் நடக்கலாம் என சொல்லப்பட்டு வந்து நிலையில், முழு தொடரும் இந்தியாவில் தான். பிளே – ஆப் போட்டிகள் தவிர்த்து மற்ற போட்டிக்கான அட்டவணை வெளியாகி விட்டது. அதிலும் இறுதி போட்டி சென்னையில் என்பதும் முடிவாகி விட்டது.

விஸ்வாசமான ரசிகரக்ககளை உடையது நம் சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த டீம்மை பொறுத்தவரை என்றுமே பேட்ஸ்மேன், ஆல் ரௌண்டார் மற்றும் ஸ்பின்னர்களுக்கு பஞ்சம் வந்ததில்லை. எனினும் வேகப்பந்துவீச்சு என்றால் சற்றே தடுமாற்றம் தான்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி இந்த சீசன் ஆடமாட்டார் என தென்னாபிரிக்காவின் மானேஜர் அறிக்கை வெளியிட்டுள்ளார். சென்ற ஸ்ரீ லங்கா ஒரு நாள் போட்டிகளின் பொழுது ஏற்பட்ட சயிட் ஸ்ட்ரெயின் தான் காரணம்.

சென்ற சீசனில் ஏழு போட்டிகளில் ஆடி 11  விக்கெட்டுகள் வீழ்த்தினார். றன் விகிதமும் 6 தான். 50 லட்சம் ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்திருந்தனர்.

இந்நிலையில் போட்டி துவங்கும் முன்பே இது பெரிய இழப்பு சி எஸ் கே நிர்வாகத்திற்கு .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top