பகல் இரவு டெஸ்ட் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளில் “சூப்பர் சீரிஸ்” நடத்த கங்குலி முடிவு

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்று இருக்கும் கங்குலி துரிதமாக செயல்பட்டு அதிரடி மாற்றங்களை கொண்டு வருவார் என பரவலாக பேசப்பட்டது. டி 20 வந்த பிறகு டெஸ்ட் போட்டிகள் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு சற்றே குறைந்தது, எனவே பிங்க் பால் வைத்து பகல் -இரவு போட்டி அறிவித்தார். கொல்கத்தாவில் பங்களாதேஷ் உடன் அதனை நடத்தி சாத்தியம் ஆக்கினார்.

அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் டாப் டீம்களை வைத்து ஆட திட்டமிடுகிறார். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஆகிய நிர்வாகங்களிடமும் பேசியுள்ளார். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் மற்றொரு அணியையும் இணைத்து ஆடுவதே இவரின் பிளான். 2021ம் ஆண்டு முதல், இந்த நான்கு அணிகளும் மோதும் கிரிக்கெட் தொடர், ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில், ஒவ்வொரு ஆண்டு சுழற்சி முறையில் ஆடுவதே திட்டம்.

எனினும் ஐசிசி விதிப்படி முத்தரப்பு ஒருநாள் தொடருக்குத்தான் அனுமதி வழங்கி உள்ளது. எனவே இது தற்போதைய நிலையில் சாத்தியம் இல்லை. எனினும் கங்குலி சாத்தியமாக்குவார் என்கின்றனர் பிசிசிஐ ஆட்கள்.

Leave a Comment