Connect with us
Cinemapettai

Cinemapettai

6 வருடங்களுக்கு பிறகு புதிய ஐபில் அணியில் சௌரவ் கங்குலி.

Sports | விளையாட்டு

6 வருடங்களுக்கு பிறகு புதிய ஐபில் அணியில் சௌரவ் கங்குலி.

ஐபில் 12 வது சீசன் போட்டிகள் வரும் மார்ச் 23 துவங்குகிறது.

தாதா சௌரவ் கங்குலியை பிடிக்காதவர்கள் என யாரையும் சொல்ல முடியாது. இந்திய அணி வெளிநாடுகளிலும் சென்று வெற்றியை குவிக்கும் என்ற நம்பிக்கையை டீம்மில் புகுத்தியவர். இன்றைய தேதிக்கு பல சூப்பர் ஸ்டார்களை நம் இந்திய ரசிகர்களுக்கு அறிமுகம் படுத்தியவர்.

கங்குலி ஆறு வருடத்துக்கு முன், புனே அணியில் இடம் பிடித்திருந்தார் கங்குலி. அதற்கு பிறகு இப்போது ஐபில் க்கு மீண்டும் வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் வகித்து வந்த தொழில்நுட்பக் குழு பதவியில் இருந்து விளகினார். அது இதற்காக தான் போல் தோன்றுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயர் டெல்லி காப்பிடல்ஸ் என மாறியது. பெயர் மற்றும் அல்ல நிர்வாகக்குழுவும் தன். கடந்த சீசன் முடிந்ததுமே GMR க்ரூப் 50 சதவிகித ஷார்களை JSW க்ரூப்பிடம் (ஜிண்டால் ) கொடுத்தனர்.

DELHI CAPITALS

இதுவரை கடந்த 11 ஐபிஎல் தொடர்களில் முதல் இரு தொடர்களில் மட்டுமே அரையிறுதி வரை டெல்லி கேபிடல்ஸ் அணி முன்னேறியது. 162 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி கேபிடல்ஸ் அணி 67 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.

இம்முறை விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஷாபாஸ் நதீம் ஆகியோரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் கொடுத்துவிட்டு அ ஷிகர் தவான் அவர்களை மாற்றாக பெற்றுள்ளது. கோலின் இங்ராம்(தெ.ஆப்ரிக்கா), அக்ஸர் படேல், ஹனுமா விஹாரி, ரூதர்போர்ட், இசாந்த் சர்மா, கீமோ பால், ஜலாஜ் சக்சேனா, அங்குஷ் பெய்ன்ஸ், நது சிங், பண்டாரு அய்யப்பா ஆகிய பாயும் எடுத்துள்ளனர்.

ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், பிரித்வி ஷா, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான், ஹர்ஸல் படேல், ராகுல் திவேஷியா, ஜெயந்த் யாதவ், மன்ஜோத் கல்ரா, கோலின் முன்ரோ, டிரன்ட் போல்ட், கிறிஸ் மோரிஸ், ரபாடா, சந்தீப் லாமிசானே ஆகியோர் இருக்கின்றனர்.

DC

பயிற்சியாளராக ஆஸி. அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். துணைப்பயிற்சியாளராக மொஹமட் கைப். இவர்களுடன் தாதா’ சவுரவ் கங்குலி அணிக்கு ஆலோசகராகச் சேர்ந்துள்ளார்.

வரும் 24-ம் தேதி மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top