மகனுடன் நீச்சல் குளத்தில் சௌந்தர்யா ரஜினிகாந்த்.! சர்ச்சையை சந்தித்த புகைப்படம்

ரஜினிகாந்தின் மகளாக சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான்,வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு சமீபத்தில் தான் விசாகன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. சௌந்தர்யா ரஜினிகாந்த் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தினமும் ஏதாவது ஒரு செய்தியை தெரிவித்து வருவார்.

தனது மகன் நிற்கும் புகைப்படத்தை தன் அப்பாவுடன் ஒப்பிட்டு வெளியிட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குழந்தைகள் மீது அக்கறை கொள்ளும் பெற்றோராக இருக்க வேண்டும் என அவ்வப்போது கூறி வருவார். சமீபத்தில் கூட மொபைல் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கு ஓவியம் வரைய கற்று கொடுங்கள் என ஒரு கருத்தை தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர் தனது மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் இங்கு சிலர் குடிக்கவே தண்ணீர் இல்லாமல் இருக்கிறோம் ஆனால் நீங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என கேள்வி கேட்டதை அடுத்து தற்போது அந்த ட்விட்டை நீக்கியுள்ளார்.

soundarya rajinikanth
soundarya rajinikanth

Leave a Comment