Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா ட்ரைலர் அப்டேட்! உங்கள் அன்புக்கு நன்றி – எமோஷனல் ஆன சௌந்தர்யா ரஜினிகாந்த்.
காலா என்கிற கரிகாலன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிங் ஆப் தாராவியாக நடித்துள்ள படம். கபாலியை மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் அவள நிலையை கருவாக கொண்ட படம். காலா திரைப்படம் மும்பைவாழ் திருநெல்வேலி மக்களின் கதைக்களம்.
படத்தை வண்டர் பார் சார்பில் தனுஷ் தயாரித்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. சந்தோஷ் நாராயணன் இசை. படம் வரும் ஏழாம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.வில்லன் நானா படேகரின் வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில், ஈஸ்வரி ராவ் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோரின் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
நேற்று மாலை இப்படத்தின் ட்ரைலர் மாலை 7 மணிக்கு (28 மே) வெளியாகும் என தனுஷ் தன் ட்விட்டரில் அறிவித்தார். அப்பொழுது சௌந்தர்யா அந்த டீவீட்டில் தன் கருத்தை பதிவிட்டார்.
” 28 மே 2011 .. என்னால் மறக்கமுடியாத தினம். அன்று தான் நாங்கள் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்து சென்றோம். கடவுளின் அனுக்கிரகத்தால் நாங்கள் சில நாட்களில் அவரை நல்ல உடல் நிலையுடன் கூட்டி வந்தோம். உங்களின் பிராத்தனைக்கு, வாழ்த்துகளுக்கும் நன்றி. இந்த ட்ரைலர் 7 வருடங்கள் கழித்து உங்களின் அன்புக்காக நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.” என்று தன் ஆழ்மனதில் இருந்து கருத்தை பதிவிட்டார்.
