fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விவாகரத்துக்கு ரெடியான கண்ணம்மா.. ரகசியத்தை உடைத்த மாமியார் – பாரதிகண்ணம்மா

bharathikannama

Videos | வீடியோக்கள்

விவாகரத்துக்கு ரெடியான கண்ணம்மா.. ரகசியத்தை உடைத்த மாமியார் – பாரதிகண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா தொடரில் கடந்த சில நாட்களாக கண்ணம்மா தனக்கு பிறந்த இன்னொரு குழந்தையை கண்டுபிடிக்க வில்லியான வெண்பாவிடம் போராடி வருகிறார்.

அதற்காக பாரதியிடம் குழந்தையை கண்டுபிடிக்க உதவி கேட்கிறார். இதனால் கடுப்பான பாரதி, கண்ணம்மாவை அவமானப்படுத்தி அனுப்புகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த வார ப்ரோமோவில் பல திருப்பங்கள் உள்ளது போல் தெரிகிறது.

வெண்பா, கண்ணம்மாவிடம் உன் குழந்தை உனக்கு கிடைக்க வேண்டும் என்றால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு கூறுகிறார். முதலில் தயங்கிய கண்ணம்மா பிறகு தன் குழந்தைக்காக கையெழுத்திட சம்மதிக்கிறார்.

அப்பொழுது அங்கு வந்த கண்ணம்மாவின் மாமியார் சௌந்தர்யா கண்ணம்மாவிடமுள்ள விவாகரத்து பத்திரத்தை பார்த்துவிட்டு பல நாட்களாக மறைத்து வைத்திருந்த ரகசியத்தை போட்டு உடைக்கிறார். ஹேமாதான் தன்னுடைய இரண்டாவது குழந்தை என்று அறிந்த கண்ணம்மா கதறி அழுவது போல் ப்ரோமோ முடிகிறது.

ரசிகர்கள் வழக்கம் போல் இதுவும் கனவு தான் என்று காட்டி விடாதீர்கள் என்றும், இந்த உண்மை பாரதிக்கு தெரிய வரும்போது என்ன நடக்கும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

நமக்கு தெரிந்த விஷயத்தையே பல ட்விஸ்டுகளுடன் இத்தனை நாளாக காட்டிய இயக்குனர் இப்பொழுதாவது இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்று வரும் வாரத்தில் காணலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top