சாதாரண ஈகோ பிரச்சனையில் பல லட்சம் தம்பதியினர் விவாகரத்து பெற்று விடுகின்றனர். அதனால் பாதிக்கப்படுவது அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான்.

பெங்களூரு நீதிமன்றத்தில் மட்டும் 25 ஆயிரம் டைவர்ஸ் கேஸ் நிலுவையில் உள்ளது. இந்தியா முழுவதும் 6 லட்சம் கேஸ் நிலுவையிலுள்ளது. நாளுக்கு நாள் விவாகரத்து வழக்கு அதிகரித்து வருகிறது.

டைவர்ஸ் கேட்பவர்களுக்கு பெரிய காரணங்கள் ஒன்றும் இருக்காது. சாதாரண விசயமாக இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுக்காததே இதற்கு காரணம் என்று கூறும் கன்னட நடிகை ஸ்ருதி, இது போன்று டைவர்ஸ் கேட்டுள்ள லட்சக்கணக்கான தம்பதியினர் நடந்ததை மறந்து உங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தை மனதில் வைத்து கொண்டு தங்கள் பாட்னரிடம் ஒரு ஸாரி (மன்னிப்பு) கேட்டால் பிரச்சனை முடிந்து விடும் என அதற்காக ஒரு நாள் ‘ஸாரி டே’ கொண்டாட வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

அதிகம் படித்தவை:  ஜெய் சென்னை-28 இரண்டாம் பாகம் படத்தின் பூஜையில் இல்லாதது ஏன் ?