Tamil Cinema News | சினிமா செய்திகள்
இனி இது போல நடக்காது.. மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி
படப்பிடிப்புகளால் இயற்கை இடங்கள் தூய்மை இல்லாமல் இருப்பதாக அதிகரித்து இருக்கும் புகார்களுக்கு இனி இது போல நடக்காது என மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.
தயாரிப்பாளர்கள் சங்க போராட்டம் 45 நாளுக்கு பிறகு சமீபத்தில் முடிந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து, படப்பிடிப்புகளும் ஜரூர் வேகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் இருக்கும் கோவளம் கடற்கரையில் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. ஆனால், மிகவும் சுத்தமாக இருக்க வேண்டிய கடற்கரையில் துப்பாக்கி குண்டுகள், உடைந்த கண்ணாடிகள், சோடா பாட்டில்கள் சுத்தப்படுத்தாமல் கிடந்து இருக்கிறது. இது பசுமை ஆர்வலர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. படப்பிடிப்புகளால் இயற்கை அசுத்தமாவதாக ஆர்வலர்கள் பலர் புகார்களை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, செக்க சிவந்த வானம் குழு படப்பிடிப்பை முடித்து கொண்டு மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் 20 நபர்களை நியமித்தது. படப்பிடிப்பிற்கு பிறகு கடற்கரையை சுத்தப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே போல, செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வரும் மக்கள் செல்வன் இது போல் நடக்காது என மன்னிப்பு கேட்டு கொண்டு இருக்கிறார்.
இதே வேளையில், விஜய்62 படத்தின் படப்பிடிப்பும் கோவளம் கடற்கரையில் தான் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளர்கள் சினிமாவிற்கு மட்டும் கோரிக்கை வைக்கும் நிலையில், பொது வெளியில் நடத்தப்படும் படப்பிடிப்புகளால் இயற்கையை கெடுக்காமல் வைத்து கொள்ள வேண்டும் எனவும் பசுமை ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
