fbpx
Connect with us

Cinemapettai

யார் அந்த சொப்பன சுந்தரி.. கரகாட்டகாரன் 2 படத்தில் பதில்.. ரசிகர்கள் ஆசை நிறைவேற போகுது

karakattakaran-2-movie

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யார் அந்த சொப்பன சுந்தரி.. கரகாட்டகாரன் 2 படத்தில் பதில்.. ரசிகர்கள் ஆசை நிறைவேற போகுது

30 வருடங்களுக்கு முன் வெளிவந்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டு பாகத்தை எடுக்க கங்கை அமரன் திட்டமிட்டு உள்ளார். அதனை பற்றி பார்க்கலாம்.

கரகாட்டகாரன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தவுடன் முக்கியமான மூன்று பேர் மற்றும் சில காட்சிகளின் தொடர்ச்சியும் இருக்குமாம். அதாவது கதாநாயகன் ராமராஜனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் ஹீரோ இல்லை.

மேலும் கவுண்டமணி, செந்தில் மிகவும் முக்கியம். இந்த மூன்று பேர்தான் முக்கியமான நபர்கள் ஆனால் கவுண்டமணி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நடிப்பாரா என்று தெரியவில்லை.

செந்திலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் படத்தில் வாழைப்பழ காமெடி போல் மற்றொரு காமெடி உருவாக்கி இருக்கிறார்களாம்.

அதே நேரத்தில் சொப்பன சுந்தரி ஆக நடிக்கப்போவது யார் என்பதையும் முடிவு செய்துள்ளார்களாம். அந்த சொப்பன சுந்தரி கதாபாத்திரத்திற்கு விடை தெரியாத கேள்விக்கு இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனாலும் பலரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. துமுகங்களை வைத்து இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top