Connect with us
Cinemapettai

Cinemapettai

வெற்றிமாறன்- சூரி விஜய் சேதுபதி இணையும் பட ஹீரோயின் யார் தெரியுமா ?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வெற்றிமாறன்- சூரி விஜய் சேதுபதி இணையும் பட ஹீரோயின் யார் தெரியுமா ?

யதார்த்தத்துக்கு அருகாமையில் படம் எடுப்பதில் வல்லவர் வெற்றிமாறன். நாவல் அல்லது சிறுகதையை படமாக்குவதை மிகவும் விரும்புவார் . லாக்கப், வெக்கை என்று நாவல்களை விசாரணை, அசுரன் என படமாக்கியுள்ளார்.

அடுத்ததாக சூரி நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் . இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.

இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இளையராஜா 8 பாடல்களை முடித்துக் கொடுத் திருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

குளிரான இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்படுவதால் உடல்நிலையைக் காரணமாக பாரதிராஜா படத்திலிருந்து விலக கிஷோர் நடிப்பார் என முடிவானது. எனினும் அவரும் விலக, அந்த கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

thangam net flix

இப்படத்தில் நாயகியாக நடிப்பது பவானி ஸ்ரீ . நெட் பிலிக்ஸுக்கு ரெடி செய்யப்பட்ட பாவக்கதைகளில் தங்கம் படம் வாயிலாக நல்ல ரீச் பெற்றார். அவரே இப்படத்தில் நாயகியாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top