Connect with us

Cinemapettai

நடிகர் சூரி வெளியிட்ட சங்கத்தமிழன் அப்டேட்: அப்போ தீபாவளிக்கு இல்லையா.?

sanga-tamizhan-soori

Cinema News | சினிமா செய்திகள்

நடிகர் சூரி வெளியிட்ட சங்கத்தமிழன் அப்டேட்: அப்போ தீபாவளிக்கு இல்லையா.?

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ராசி கண்ணா நடிப்பில் உருவாகியிருக்கும் படம்”சங்கத்தமிழன்”. இப்படத்தை வாலு, ஸ்கெட்ச் போன்ற படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் மூலம் நாகிரெட்டி தயாரித்துள்ளார். இப்படத்தில் சூரி காமெடி வேடத்தில் நடித்துள்ளார்.

சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

“சங்கத்தமிழன் படத்தின் டப்பிங் பணி முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் செப்டம்பர் 17ஆம் தேதியும், படம் அக்டோபர் 4ஆம் தேதியும் வெளியாகும். சங்கத்தமிழன் யூனிட் உடனும், விஜய் சேதுபதி மாமாவுடன் வேலை செய்தது சந்தோசமாக உள்ளது. இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொடுத்த தனது மகளுக்கும் நன்றி”என்று கூறியுள்ளார்.

சூரியின் இந்த டுவிட்டர் பதிவால், தீபாவளிக்கு பிகிலுடன் ரிலீஸாகும் என எதிர்பார்த்த சங்கத் தமிழன் படம், தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி அக்டோபர் 4ஆம் தேதியே வெளியாகிறது தெரியவந்துள்ளது. படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நேரத்தில், சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மொத்தத்தையும் அறிவித்ததால் படக்குழு சிறிது சங்கடத்தில் உள்ளது.

எனவே தமிழன் ஜெயித்தால் பெருமை தானே..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top