சூரி இந்தியத் திரைப்படத்தில் காமெடி நடிகராவார்.இவர் வெளிவந்த  வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அழைக்கபடுகிறார்.

இவர் தன் திறமையால் மிகவும் கஷ்டப்பட்டு திரைப்படத்துறையில் காமெடியனாக வளம் வருகிறார்,இவர் தன காமெடி நடிப்பால் முன்னணி காமெடியனாக இருக்கிறார்,தற்பொழுது இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன.

2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படம் சாமி 14 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரகி வருகிறது நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் நடிக்கிறார்.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சாமி’. நடிகர் ‘சியான்’ விக்ரம், நடிகை திரிஷா, நகைச்சுவை நடிகர் விவேக், வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.saamy

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். வசூல் ரீதியிலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.14 ஆண்டுகளுக்கு பின் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை துவங்கி உள்ளார் இயக்குநர் ஹரி.

இந்த படத்திலும் நடிகை திரிஷாவும் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். வில்லனாக நடிகர் பாபி சிம்ஹா நடிக்க உள்ளார். இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். முதல் பாகத்தில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் சூரி களமிறங்க உள்ளார். vivek

சாமி முதல் பாகத்தில் காமெடியனாக நடித்த விவேக் இரண்டாம் பாகத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. முதல் பாகத்தில் அவர் நடித்த காமெடி அனைத்தும் ரசிகர்கள் மனதில் ஆழமாய் நின்றன.

தற்பொழுது விவேக் மார்கெட் சரி பாதியாக குறைய தொடங்கிவிட்டன அவர் மீண்டும் தன் பழைய மார்கெட்டை பிடிக்க வேண்டும் என்று விவேக்கின் அனைத்து ரசிகர்களும் எதிர்பார்கின்றனர்.விவேக் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இதர ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கின்றனர்.