fbpx
Connect with us

Cinemapettai

மதுரையில் நடிகர் சூரியின் ஓட்டல்களை திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்

Tamil Nadu | தமிழ் நாடு

மதுரையில் நடிகர் சூரியின் ஓட்டல்களை திறந்து வைத்தார் சிவகார்த்திகேயன்

நடிகர் சூரி, மதுரையில் புதிதாக கட்டியுள்ள சைவம் அசைவம் ஓட்டல்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று காலை திறந்து வைத்தார்.

நகைச்சுவை நடிகர் சூரி, 2017 ஆம் ஆண்டு அம்மன் என்ற சைவ உணவகத்தை, மதுரை காமராஜர் சாலையில் தொடங்கினார். அந்த உணவகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் அப்போது திறந்து வைத்தார்.

இதையடுத்து சூரி மீண்டும் இரு உணவகங்களை கட்டியுள்ளார். அம்மன் சைவ உணவகம் மற்றும் அய்யன் அசைவ உணவகங்களை மதுரை அவனியாபுரம், விமான நிலைய பைபாஸ் சாலையில் புதிததாக ஆரம்பித்துள்ளார்.

இந்த புதிய உணவகங்களை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த உணவகங்களின் திறப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டார்கள். அவர்களுக்கு நடிகர் சூரி நன்றி கூறினார்.

https://twitter.com/LMKMovieManiac/status/1190158171278430210?s=20

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top