fbpx
Connect with us

Cinemapettai

சுவாசிக்க நல்ல காற்றை கொடு என்று கேட்டவங்க மூச்சை நிறுத்திடீங்களே -ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சூரி!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சுவாசிக்க நல்ல காற்றை கொடு என்று கேட்டவங்க மூச்சை நிறுத்திடீங்களே -ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சூரி!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர் பொதுமக்கள் . 99 நாட்கள் அமைதிப்போராட்டமாக நடந்த அது எவ்வாறு நூறாவது நாளன்று போர்க்களமாக மாறியது என்பது தான் புரியாத புதிர்.

மத்திய, மாநில அரசு, ஊடகங்கள் என எதுவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். மக்களின் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது போலீஸ். துப்பாக்கி சூடு, கூட்ட நெரிசலில் சிக்கியவர் என உயிர் பலியின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் நடிகர் பரோட்டா சூரி, தன் மனதில் உள்ள ஆதங்கத்தை தனியார் நியூஸ் சேனல் ஒன்றில் தொலைபேசி வாயிலாக பகிர்ந்துள்ளார்.

இலங்கையில் நடந்த பொழுதும் வேடிக்கை தான் பார்த்தோம் என்றும், தண்ணீர் சுத்தமாக இல்லையென்றால் அக்கம் பக்கத்தில் வாங்கி குடிக்கலாம், காற்று மாசு பட்டால், ஊரை விட்டு தான் வெளியேறவேண்டும். மேலும் எவ்வாறு அந்த நிறுவனம் நடத்துபவன் தைரியமாக மீண்டும் நடுத்தவேன் என்று சொல்கிறான் என்றும், தன் மனக்குமுறலை பேசியுள்ளார்.

ஆடியோ கிளிப் இணைப்பு

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top