Videos | வீடியோக்கள்
நாய்க்கு டப்பிங் பேசியுள்ள சூரி.. இணையத்தைக் கலக்கும் அன்புள்ள கில்லி பட டிரைலர்

தமிழில் ஃபேண்டசி போன்ற திரைப்படங்கள் வெளியாகி நீண்ட நாட்களாகிவிட்டது. அப்படி ஃபேண்டசி படங்கள் வெளியானாலும் பெரிய அளவு தமிழ் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதன் காரணமாகவே அப்படிப்பட்ட படத்தை எடுக்க இயக்குனர்கள் யோசிக்கின்றனர்.
ஆனால் ஹாலிவுட் சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் அவர்கள் எடுக்கும் அனைத்து படங்களுமே ஃபேண்டசி படங்களாகத் தான் இருக்கும். எந்த மாதிரி படம் எடுக்கிறோம் என்பதுதானே முக்கியம்.
கோடை காலங்களில் தனியார் தொலைக்காட்சிகளில் ஹாலிவுட் சினிமாவில் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை டப்பிங் செய்து ஒளிபரப்பி நல்ல டிஆர்பி பார்த்துவிடுவார்கள்.
பெரும்பாலும் குழந்தைகளை கவர்வதற்காகவே இப்படிப்பட்ட வேலைகளை பல டிவி சேனல்கள் செய்து வருகின்றன. ஆனால் தற்போது முதன் முதலில் தமிழ் சினிமாவில் நாய்க்கு டப்பிங் கொடுத்து ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர்.
அந்தப் படம்தான் அன்புள்ள கில்லி. ராமலிங்கம் ஸ்ரீநாத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மைம் கோபி, இளவரசு, நடிகை சாந்தினி, ஹீரோவாக புதுமுகம் மைத்திரேயா ராஜசேகர் போன்றோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் முக்கிய தேர்வாக இருக்கும் நாய்க்கு டப்பிங் செய்துள்ளவர் காமெடி நடிகர் சூரி.
தற்போது ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபகாலமாக நல்ல கதை கரு உள்ள படங்கள் தமிழில் வெற்றி பெற்று வருவதால் இந்தப் படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறது படக்குழு.
