ரொம்பப் பரபரப்பா இருக்கேன். இப்பக்கூட மதுரை ஃப்ளைட்டைப் பிடிக்க ஏர்போர்ட்லதான் இருக்கேன். சீக்கிரம் பேசிரலாமா?” – மூச்சுவிடமால் பேசுகிறார் நடிகர் சூரி. ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு… என்று சூரியின் பேட்டியிலிருந்து..

“பத்து வருஷங்களுக்கும் மேல் சினிமாவுல இருக்கீங்க. இந்தப் பயணத்தை எப்படிப் பார்க்குறீங்க?”

“சினிமாதான் என்னை பக்குவப்படுத்தியிருக்கு. நான் எந்தளவுக்கு பக்குவப்பட்டிருக்கேன்னு என்கூட வேலை செய்யும் டெக்னீஷியன்கள், இயக்குநர்களுக்குத் தெரியும். ஆரம்பத்தில் இயக்குநர்கள் சொன்னதை அப்படியே வாங்கி நடிச்சிட்டு இருந்தேன். இப்ப ஸ்பாட்டுக்கு வந்தப்பிறகு ஸ்க்ரிப்ட் பேப்பரை வாங்கி என் ஸ்டைலுக்கு ஏற்றமாதிரி எப்படியெல்லாம் மாத்தலாம்னு யோசிப்பேன். இதுக்கும் காரணம் இயக்குநர்கள்தான்.

அதிகம் படித்தவை:  நயன்தாராவுடன் நான் டூயட் பாட வேண்டும் என்று ஆசை – பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!!!

VijaySethupathi-Merku Thodarchi Malaiஎனக்கான சுதந்திரத்தை அவங்க கொடுக்குறாங்க. உதாரணம் ‘சீமராஜா’ படம். பொன்ராம் சார் ஸ்க்ரிப்ட் பேப்பரை கொடுத்தவுடனேயே நானும் சிவாவும், ‘நம்ம மாடுலேஷனுக்கு ஏற்றமாதிரி எப்படிப் பேசலாம்’ என டிஸ்கஸ் பண்ணுவோம். பிறகு அதை பொன்ராம் சார்ட்ட சொல்லுவோம். நாங்க சொல்லிட்டு இருக்கும்போதே அவர் சிரிச்சுட்டா, எங்க ஐடியா ஓகே ஆகிடும். சிரிப்பு வரலைனா அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே செஞ்சிடுவோம்.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டு அனுமதி தமிழர்களின் வெற்றி திருவிழா: சூரி

எத்தனை பேர்கூட நடிச்சாலும் சிவகார்த்திகேயன்கூட நடிக்குறது கண்ணை மூடிட்டு சிக்ஸ் அடிக்குற மாதிரி ரொம்ப எளிதான விஷயம். ஏன்னா சிவா எப்படி பந்து போடுவார்னு எனக்கு நல்லாவே தெரியும்.”