Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் சிக்ஸ் பேக் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை மிரட்டி விட்ட பரோட்டா சூரி.. ஜாக்கி ஜ**டி தான் கொஞ்சம் ஓவரா இருக்கு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் நடிகர் சூரி, தனது எதார்த்தமான மதுரபேச்சு கலந்த நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வித்தைக்காரன்.
2009 ஆம் ஆண்டு விஷ்ணு நடிப்பில் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் புரோட்டாவை வெளுத்துக் கட்டி நகைச்சுவையின் உச்சத்திற்கு ரசிகர்களை கொண்டு சென்றதால் இவருக்கு ‘புரோட்டா சூரி’ என பெயர் கிடைத்தது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா, ரஜினி முருகன்,எங்க வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து சூரி தனது நகைச்சுவையை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
எவ்வளவு நாள்தான் நகைச்சுவை நடிகராகவே இருப்பது என யோசித்த சூரி, தற்போது முழு வீச்சில் டயட், எக்சசைஸ் போன்றவற்றை மேற்கொண்டு சிக்ஸ்பேக் சூரியாக தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு எல்லாம் சவால்விடும் போட்டோஷூட் ஒன்றை சமீபத்தில் நடத்தியுள்ளார்.
இந்த போட்டோ ஷூட் எதற்காக நடத்தப்பட்டது என்றால், பிரபல முன்னணி இயக்குனரான வெற்றிமாறனின் படத்தில் கதாநாயகனாக சூரி நடிப்பதால், சிக்ஸ்பேக் சூரியாக மாறி உள்ள புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மீரான் மைதீன் எழுதிய ‘அஜ்னபி’ என்ற நாவலை மையமாகக் இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் சினிமாவில் கதாநாயகனாக சூரியை பார்க்க போகிறோம் என்பதால் ரசிகர்கள் குஷியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

soori-cinemapettai-1
