Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரம்மிக்க வைக்கும் பிரம்மாண்டமான சாதனை படைத்த சூரரைப்போற்று.. அமேசான் ப்ரைம் தளமே திணறிபோச்சாம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சூர்யா. இவரது நடிப்பில், சுதா கொங்கராவின் இயக்கத்தில், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, பூ ராமு போன்ற பல முன்னணி நடிகர்களின் நடிப்பில், மாறுபட்ட கதை களத்தில் உருவான திரைப்படம் தான் ‘சூரரைப்போற்று’.
இந்தப் படம் நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றது என்பது நாம் அறிந்ததே.
இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையத்தில் கசிந்து ‘சூரரைப்போற்று’ படக் குழுவினரையும், சூர்யா ரசிகர்களையும் உற்சாகபடுத்தி உள்ளது.
அதாவது சூரரைப்போற்று வெளியான சிறிது நேரத்திலேயே பல்வேறு தரப்பினரும் படக்குழுவினருக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக சூர்யாவின் நடிப்பும், சுதாவின் இயக்கமும், ஜிவி பிரகாஷ் இசையும் படத்தை தாறுமாறாக ஹிட்டாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறிருக்க தற்போது இந்த படத்தை அமேசான் பிரைம் தளத்தில் இதுவரை 11 லட்சம் பேர் பார்த்து விட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. மேலும் அமேசான் ப்ரைம் தளத்தில் இதுவரை வெளியான தமிழ் படங்களை பார்த்த மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை காட்டிலும் இது அதிகம் என தெரிவிக்கின்றனர்.
எனவே, இவ்வாறு சினிமா உலகையே பிரமிக்க வைக்கும் புதிய சாதனையை படைத்த சூர்யாவிற்கும் சுதா கொங்கராவிற்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

soorarai-pottru-full-movie-review-cinemapettai-1
