Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைப் போற்று – இணையதளத்தில் அனல்பறக்கும் சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்.. செம கெத்து
சூர்யா நடிப்பில் வெளிவந்த காப்பான் திரைப்படம் மக்களிடையே விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் சூர்யா சமுதாயத்திற்காக பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் முக்கியமாக படிப்பிற்கு.
தற்போது சூர்யாவின் அடுத்த படமான சூரரைப் போற்று படப்பிடிப்பு முடிந்து விட்ட சூழ்நிலையில் சூர்யா தன்னுடன் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களுக்கும் தங்கக் காசு வழங்கியுள்ளார்.
சூரரைப் போற்று படத்தில் 150க்கும் மேலான ஊழியர்கள் இந்த 8 கிராம் தங்க காசை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைக்கு பின்னால் இருக்கும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணமாக சினிமா துறையில் இவர்கள் செய்து வரும் இந்த செயல் மக்களால் வரவேற்கப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் ரசிகர்களை தாண்டி படப்பிடிப்பில் இரவு பகலாக குறைத்து வெற்றிக்கு துணையாக நிற்கும் ஊழியர்களை சமமாக மதிப்போம் என்பதே இதற்கான முக்கிய காரணம் ஆகும்.
இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார், மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படத்தின் இயக்குனர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சூர்யா ‘மாறா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளிவந்து சமூக வலைத்தளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

suriya-firstlook-sp
