fbpx
Connect with us

Cinemapettai

மாஸ்டருடன் போட்டி போட தயாரான இரண்டு படங்கள்.. வசூலை அள்ள நினைத்த தயாரிப்பாளருக்கு வச்சாங்க வேட்டு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாஸ்டருடன் போட்டி போட தயாரான இரண்டு படங்கள்.. வசூலை அள்ள நினைத்த தயாரிப்பாளருக்கு வச்சாங்க வேட்டு

தளபதி விஜய் நடிப்பில் கோடை விடுமுறை வெளியீடாக வரவிருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி ‘புகழ்’ லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரிக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். நாயகிகளாக ஆண்ட்ரியா மற்றும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது படுவேகமாக நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தொடர் விடுமுறை காரணமாக கிட்டத்தட்ட தேதி உறுதியாக தான் தெரிகிறது. எனவே சோலோ ரிலீசாக வெளிவரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் தொடர் விடுமுறை என்பதால் நன்றாக கல்லா கட்டலாம் என போட்டிக்கு சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் களமிறங்க உள்ளது. சூர்யாவின் மாறுபட்ட கதாபாத்திரத்தில் வெளியான சூரரைப்போற்று படத்தின் டீசர் சமீபத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பொங்கல் விடுமுறைக்கு வெளியாக இருந்த இந்த படம் கிராபிக்ஸ் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் கோடை விடுமுறையை நோக்கி நகர்ந்தது. இந்நிலையில் இரண்டு படங்கள்தான் ரிலீஸ் என முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் திடீரென பந்தயத்தில் கலந்தவர்தான் சசிகுமார்.

soorarai-potru

soorarai-potru

சமீபத்தில் வெளியான சசிகுமாரின் படங்கள் அவ்வளவாக ஓடவில்லை என்றாலும் தற்போது வெளியாகும் எம்ஜிஆர் மகன் என்ற படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து பெரிய வெற்றி படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கி உள்ளதால் இந்த படமும் கோடைவிடுமுறையை குறிவைத்து உள்ளது. குடும்ப பாங்கான கிராமத்து திரைப்படத்திற்கு ஏற்கனவே தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு இருப்பதால் இந்தப் படம் ஹிட் அடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

mgr-magan

mgr-magan

ஆகையால் தொடர் விடுமுறை என கல்லா கட்ட நினைத்த தயாரிப்பாளர்களுக்கு சற்று சறுக்கல் ஏற்பட்டு உள்ளது. இருந்தும் கதை நல்லா இருந்தா எல்லா படமும் ஓடும் என்பது ஏற்கனவே போட்டி போட்ட திரைப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top