Connect with us
Cinemapettai

Cinemapettai

suriya-sooraraipottru

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் சூரரைப்போற்று ரிலீஸ் ஆகாமலே 1000 மில்லியன் மேல் வசூல்! மிரண்டு போய் OTT தளத்தில் படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன்பின் ஹாலிவுட் தெலுங்கு படங்களில் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் விளங்கியவர் சுதா கொங்கரா.

இவர் தமிழில் இறுதிச்சுற்று, துரோகி போன்ற படங்களை இயக்கி தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று OTT தளத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

தற்போது இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் 40 கோடிக்கு மேலாகதான் வியாபாரம் செய்யப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது.

சூரரைப்போற்று படத்தின் முழு உரிமையும் பெறுவதன் வாயிலாகவே இப்படம் 100 கோடிக்கு மேலாக வசூலை ஈட்டியுள்ளது.

எப்படி இவ்வளோ தொகைக்கு விலைபோனது என்றால், அமேசான் பிரைம் ரைட்ஸ் மூலமாக ரூ. 45 கோடியும், தமிழ் மற்றும் தெலுங்கில் சாட்டிலைட் உரிமம் ரூ.20 கோடியும், ஹிந்தி டப் மற்றும் ரீமேக் ரைட்ஸ் மூலம் ரூ. 20 கோடியும், ஓவர்சிஸ் மூலமாக ரூ.10 கோடிக்கு மேலாகவும் சூரரைப்போற்று படத்திற்கான முழு உரிமையை பெறுவதன் வாயிலாகவே, வியாபார ரீதியாகவே குறைந்தது 100 கோடி வசூலை ஈட்டியுள்ளதாம்.

இது மட்டுமல்லாமல், தற்போது OTT ரிலீஸ் செய்துள்ள ஆஃபரின், ஒரு பார்வையாளருக்கு இவ்வளவு என தனியாக ஒரு குறிப்பிட்ட தொகை தயாரிப்பாளருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தியேட்டரில் ரிலீஸ் செய்யாமலேயே, சூர்யாவின் சூரரைப்போற்று படமானது இவ்வளவு வசூலை குவித்து இருப்பதால், தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற ஒரே முடிவில் இருக்கும் சில படங்களும் கூடிய விரைவில் OTT தளத்திலே ரிலீஸ் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Continue Reading
To Top