Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வழக்கம்போல் வேலையை காட்டிய தமிழ் ராக்கர்ஸ்.. சூரரைப்போற்று வெளியான 10 நிமிடத்தில் சுடச்சுட ஹெச்டி பிரிண்ட் ரெடி

உலக சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது தமிழ் ராக்கர்ஸ் என்ற பைரசி இணையதளம்.

சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை அனைத்து படங்களையும் வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே வெளியீட்டு தயாரிப்பாளர்களை சோகத்தில் ஆழ்த்தி விடுகின்றனர்.

சமீபகாலமாக தியேட்டர்களில் படம் வெளியாகமல் அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியாவது இன்னும் அவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது.

படம் வெளியான பத்து நிமிடங்களிலேயே ஹெச்டி பிரிண்ட் வசதியுடன் புது படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் சூர்யா நடித்த சூரரைப்போற்று படம் நேற்று நள்ளிரவில் அமேசான் தளத்தில் வெளியானது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

படத்தை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் படம் வெளியான பத்து நிமிடத்தில் சுடச்சுட சூரரைப்போற்று ஹெச்டி பிரிண்ட் வெளியிட்டு படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

soorarai-pottru-full-movie-review-cinemapettai-1

soorarai-pottru-full-movie-review-cinemapettai-1

Continue Reading
To Top