Connect with us
Cinemapettai

Cinemapettai

soorarai-pottru-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை பார்த்த மாதவன்.. அவர் கூறிய விமர்சனத்தால் அதிரும் இணையதளம்

சூர்யா நடிப்பில் பல சர்ச்சைகளைக் கிளப்பிய சூரரைப்போற்று படம் ஒருவழியாக அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.

மொத்த தமிழ் சினிமாவே இந்த படத்தைதான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் மட்டும் பெரிய அளவில் வசூல் செய்தால் மேலும் சில பெரிய படங்களும் அமேசான் தளத்தில் வெளியாவதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறது வட்டாரம்.

இது ஒருபுறமிருக்க கடந்த சில வருடங்களாக வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.

soorarai-pottru-cinemapettai

soorarai-pottru-cinemapettai

இந்த படத்தை மாதவனின் இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மாதவன் நடித்த நிசப்தம் படம் அமேசான் தளத்தில் வெளியானது. அதே போல அவருடைய அடுத்த ரிலீஸ் ஆன மாறா படமும் அதே அமேசான் தளத்தில் தான் வெளியாகிறதாம்.

இந்நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டரில் உரையாடிய மாதவனிடம் சூர்யா ரசிகர் ஒருவர், சூரரைப்போற்று படம் பார்த்து விட்டீர்களா? என கேட்டுள்ளார்.

அதற்கு மாதவன் mind-blowing என கமென்ட் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது சமூக வலைதளங்களில் சூரரைப்போற்று படத்தினை ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top