Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகும் சூரரைப் போற்று.. அப்செட்டில் படக்குழு
தமிழ் சினிமாவில் பயோபிக் படமாக உருவான எந்த படம் இதுவரை பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியான படங்களில் அதிகம் பேர் பார்த்துள்ள படமாகவும் சூரரைப்போற்று பெரும் சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் சூட்டோடு சூடாக விரைவில் தொலைக்காட்சியிலும் சூரரைப்போற்று படத்தை ஒளிபரப்பு செய்ய சன் டிவி நிறுவனம் ஆர்வமாக உள்ளதாம்.
வருகிற பொங்கலுக்கு சூரரைப்போற்று படத்தை கண்டிப்பாக ஒளிபரப்ப வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார்களாம். ஆனால் படக்குழுவினர் தரப்பில் இப்போதுதான் படம் வெளியாகி இருக்கிறது எனவும், தமிழ் புத்தாண்டுக்கு படத்தை ஒளிபரப்பினால் சிறப்பாக இருக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்களாம்.
இருந்தாலும் சன் டிவி நிறுவனம் அதற்கு செவி சாய்த்ததாக தெரியவில்லை. அனேகமாக பொங்கலுக்கு சூரரைப்போற்று கன்ஃபார்ம் என்றுதான் செய்திகள் வெளியாகியுள்ளது.

soorarai-pottru-on-suntv
