Tamil Cinema News | சினிமா செய்திகள்
அடுத்தடுத்து சாதனையில் மிரட்டும் சூரரைப்போற்று.. விஜய்யின் கோட்டையை நொறுக்கிய சூர்யா!

சூர்யா நடிப்பில் OTT தளத்தின் மூலம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் பாராட்டை பெற்ற படம் சூரரைப்போற்று. இப்படம் வரிசையாக பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
சமீபத்தில் OTT தளத்தில் வெளியாகிய படங்களில் சூரரைப்போற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த அளவிற்கு இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
குறிப்பாக அப்பா, மகன் காட்சியில் சூர்யாவின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த இப்படத்தில் அபர்ணா, கருணாஸ் மற்றும் ஊர்வசி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளன.
தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது பிரபல ராம்சினிமாஸ் சார்பாக ஒவ்வொரு படத்திற்கும் வாக்குகள் ரசிகர்களிடம் கேட்கப்பட்டது.
அதனடிப்படையில் அதிக வாக்குகள் பெற்ற கில்லி மற்றும் அசுரன் திரைப்படத்தை ஓரங்கட்டிவிட்டு தற்போது சூரரைப்போற்று திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் மொத்தமாக ரசிகர்கள் கொடுத்த வாக்கு 97.4 ஆயிரம் வாக்குகள். அதில் சூரரைப்போற்று மட்டும் 46.9% பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் பெற்றுள்ளது.

surya
தற்போது ராம் சினிமாஸ் போட்டியில் பங்கேற்ற அனைத்து படங்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. மேலும் வாக்குக் கொடுத்த அனைத்து ராசிகளுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளது.
கில்லி திரைப்படம் 16 வருடங்களுக்கு முன் வெளிவந்தது, ஆனாலும் கூட தற்போது சூரரைப்போற்று அதற்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளது.

soorarai-potturu
