Connect with us
Cinemapettai

Cinemapettai

sooraraipotru

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூரரைப்போற்று படத்தை பார்த்த அதிகாரிகள்.. என்னயா இது என உடனே சொன்ன விமர்சனம்

சூர்யாவின் தயாரிப்பில், ஜோதிகாவின் நடிப்பில் வெளிவந்த ‘பொன்மகள் வந்தாள்’ OTT-யில் வெளியிடப்பட்டு பெரும் ஆதரவைப் பெற்றது. ஆனாலும் கூட OTT நிறுவனங்கள் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால், சூரரைப்போற்று தங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று சூர்யாவிடம் மல்லுக்கட்டி உள்ளனர்.

ஆனால் சூர்யா திட்டவட்டமாக சூரரைப்போற்று திரையரங்கத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். இது ஒருபுறமிருக்க லாக் டவுன் முடிந்தவுடன் முதல் படமாக சூர்யாவின் சூரரைப்போற்று வெளிப் வருவற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

இதனால் தான் சென்சார் சர்டிபிகேட் அவசர அவசரமாக வாங்கியுள்ளனர், சூரரைப்போற்று படத்தில் மாறா என்ற கதாபாத்திரம் மிக அற்புதமாக வந்திருப்பதாக சென்சார் படம் பார்த்த  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்திற்கு சென்சார் போர்ட் ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூரரைப்போற்று படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சூர்யா மற்றும் சுதா கொங்கரா வெகுவாக பாராட்டியுள்ளனர்.

இதுவரை இப்படி ஒரு படம் பார்த்ததில்லை என்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வியாபாரமாகும். ஆந்திராவில் தற்போது வரை 15 கோடிக்கு மேல் விற்பனை ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

மொத்தத்தில் இந்த படம் கிட்டத்தட்ட 200 கோடி வரை வருமானம் ஈட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏற்பட்ட ஒரு சில சரக்குகளை இந்த வருடம் சூர்யா சூரரைப்போற்று மூலம் சரிசெய்து விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த கொண்டாட்டத்தில் தியேட்டரில் பார்ப்பதற்கு தயாராகியும் வருகின்றனர்.

Continue Reading
To Top