Videos | வீடியோக்கள்
சூரரைப் போற்று படத்திலிருந்து வெளியான மேக்கிங் வீடியோ.. கெத்து காட்டும் சூர்யா!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா முதன் முறையாக நடித்துள்ள சூரரைப்போற்று படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜி வி பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் செம வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக சூரரைப்போற்று படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
2020 தமிழ் புத்தாண்டுக்கு வெளியாக இருந்த சூரரைப்போற்று படம் தற்போது அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளிவர உள்ளது.
இதற்காக தற்போது படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு முன்னோடியாக தற்போது சூரரைப்போற்று படத்தின் மேக்கிங் காட்சிகள் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்காக சூர்யா கிட்டத்தட்ட 25 கிலோ வரை உடலை ஏற்றி இறக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூர்யாவின் சூரரைப்போற்று படம் அவருடைய சினிமா கேரியரில் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள்.
