Tamil Cinema News | சினிமா செய்திகள்
சூரரைபோற்று பற்றிய ரகசிய தகவலை பகிர்ந்த பிரபலம்.. வெறித்தனமாக வெயிட் செய்யும் சூர்யா ரசிகர்கள்
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று OTT தளத்தில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. சூர்யா இந்த படத்தின் தயாரிப்பாளராக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இப்படத்திற்காக உழைத்த ஒவ்வொருவரும் வியர்வை வீணாகி விடக்கூடாது என்பதற்காக OTT தளத்தில் வெளியிடுகிறேன், என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி படம் OTT தளத்தில் வெளி வர உள்ளது. இந்தப் படத்தின் வெளிவந்த பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் மேற்கொண்டு மூன்று பாடல்களை, வெளியிட தயாராக உள்ளதாக ஜி வி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர், அந்த மூன்று பாடல்களும் எப்போது வெளியிடப்படும் என்பதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
OTT தளத்தில் சூரரைப்போற்று வெளிவருவதால் ஒருபுறம் ஆதரவு கிடைத்தாலும், மற்றொருபுறம் எதிர்ப்புகள் கிளம்பி கொண்டு தான் இருக்கின்றது. எப்படியாவது தனது முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாரா என்று சூர்யாவின் ரசிகர்கள் ஏங்கிக் கொண்டு உள்ளனர்.
ஆனால் ஒரு துளி கூட வாய்ப்பில்லை என்பதும் இதற்கான வர்த்தகரீதியான லாபத்தையும் சூர்யா பெற்று விட்டதாகவும், அதில் ஐந்து கோடியை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க முடிவு செய்து விட்டார் சூர்யா தரப்பு தெரிவித்துவிட்டனர்.

gv-prakash
